Grabline.com - News from India, USA and World. Deals and comparison shopping to save you money.
Sat, 05 Jul 2008 11:11 am PDT
 

News and Deals - Grab it all here

Some go everywhere, some grab it all here

 News | Hindi | Shopping | Deals | Find Lowest Price Save! | Credit Cards Compare!

"Thinking is one thing no one has ever been able to tax." - Charles Kettering
 
Spread Grabline.com
 
 OneIndia - Tamil 
Sat, 05 Jul 2008 16:02:37 GMT
•  சதா-ஷமிதாவுடன் 'மேடி'! 
மாதவனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் சதா. மாதவன் அடுத்து நடிக்கவுள்ள படம் நான் அவள் அது. தெலுங்குப் பட இயக்குநர் கோனா வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இதில் மாதவனுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் சதா, இன்னொருவர் ஷமீதா ஷெட்டி. மாதவனுடன் சதா ஜோடி சேருவது இது 3வது முறை. இதற்கு முன்பு இருவரும் இணைந்து இரு படங்களும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன, வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படி கல்லாக் கட்டின. இந்த ...
 
•  சிம்பு- நயன் ஒரு ஜில் சந்திப்பு! 
கோலிவுட்டின் இன்றைய எக்ஸ்க்ளூசிவ் இதுதான்.... சிம்பு-நயன்தாரா மறுபடியும் பார்க் ஓட்டலில் சந்தித்தார்கள். சிறிது நேரம் தங்கள் கேரியர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்!! கிசுகிசுவல்ல... அப்பட்டமான உண்மை! நடந்தது இதுதான்... அடிபட்ட கால் சரியானதும், நேற்று இரவு விமானத்தில் வெளியூருக்குப் புறப்பட்டிருக்கிறார் சிம்பு. ஆனால் விமானம் பல மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் சூழ்நிலை. உடனே அந்த விமான நிறுவனம் பார்க் ஓட்டலில் அறைகளைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறது அதில் பயணித்தவர்களுக்கு. தன் ...
 
•  பிலிம்பேர் விருது பட்டியலில் ரஜினி-நயன் 
55-வது பிலிம்பேர் விருதுக்கான தேர்வுக் குழுவின் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா, அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 
•  ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் 
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் ராமேஸ்வரம் தீவில் மீன் பிடி தொழில் ஸ்தம்பித்துள்ளது.
 
•  குவைத்தில் இந்தியர் தூக்குப் போட்டுத் தற்கொலை 
துபாய்: குவைத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். துபாயின் ஷுவாய்க் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இவர் தங்கியிருந்தார். புதன்கிழமை காலை அப்பகுதி வழியாக சென்ற ஒருவர், இந்தியத் தொழிலாளர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீஸுக்கு அவர் தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி ...
 
•  செல்வராகவனுக்கு இசைக்கும் அமரன்! 
இயக்குநர் செல்வராகவன் நிஜமாகவே பிஇ பட்டம் பெற்ற இன்ஜினீயர். ஆனால் 'அனிதாவின் காதல்களும்', வீட்டுச் சூழலும் அவரை டிராயிங் ஷீட், கம்ப்யூட்டர் ஸ்கெட்ச்சையெல்லாம் தூக்கியெறியச் செய்து ஸ்டார்ட் கட் சொல்ல வைத்து விட்டது.
 
•  கமல் கூப்பிடறார்!! - ஸ்ரேயா 
மர்மயோகியில் ஜோடியாக நடிக்க என்னைக் கூப்பிடுகிறார் கமல்ஹாசன் என்கிறார் ஸ்ரேயா. அசோக் அமிர்தராஜ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் தன் போர்ஷனை முடித்துக் கொடுத்த கையோடு, ஜக்குபாயில் சரத் மகளாக நடிக்க சென்னை வந்துவிட்டார் ஸ்ரேயா. தனது வெளிநாட்டுப் பட அனுபவம் குறித்து அவர் கூறியது: அமிர்தராஜ் படத்தில், கால் சென்டரில் வேலை பார்க்கும் வெளிநாட்டுப் பெண் வேடம் எனக்கு. ரொம்ப இனிமையான வேடம். வெளிநாட்டு இளைஞர் ஒருவருடன் தொலைபேசியிலேயே எனக்கு காதல் ...
 
•  காதலின் பெயரில் ஒரு சண்டை! 
தொன்னூறுகளின் ஆரம்பத்தில் ஹாலிவுட்டைக் கலக்கிய வான் டாமை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்திருக்க முடியாது. தி மஸில்ஸ் ஃப்ரம் பிரஸ்ஸல்ஸ் எனப் புகழப்பட்ட ஜீன் கிளாட் வான் டேம் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். ப்ளட் ஸ்போர்ட், டபுள் இம்பாக்ட், யுனிவர்ஸல் ஸோல்ஜர் படங்களின் மூலம் மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக புகழப்பட்டவர். ஆனால் மனைவியைத் துன்புறுத்துதல், அடிக்கடி நிர்வாணமாகி தன் உடலை பொது இடத்தில் காட்டிக் கொள்வது போன்ற நடவடிக்கைகளால் பெயராக் கெடுத்துக் ...
 
•  பாமகவினர் சாலை மறியல், உண்ணாவிரதம், கல்வீச்சு 
அரியலூர்: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் சென்னையில் பாமகவினர் போராட்டம், சாலை மறியல், கல்வீச்சு ஆகியவற்றில் இறங்கினர். கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
 
•  காங்.கை 'பிளாக்மெயில்' செய்யவி்ல்லை-அமர்சி்ங் 
டெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வையும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோராவும் தவறி விட்டனர் என்று சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
 
•  முலாயம் இல்லை-செளதாலா: பிளவு இல்லை-நாயுடு 
டெல்லி: முலாயம் சிங் யாதவ் எடுத்த முடிவால், 3வது அணியிலிருந்து அவரது சமாஜ்வாடி கட்சி தானாகவே வெளியேறி விட்டது. இப்போது அந்தக் கட்சி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் இல்லை என்று முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா கூறியுள்ளார். இதன் மூலம் 2வது முறையாக 3வது அணி உடைந்துள்ளது.
 
•  பிரதமர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்-அத்வானி 
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பாஜக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் என பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார்.
 
•  சீட் தந்தால் கூட்டணி: இது கார்த்திக் காமெடி! 
மதுரை: சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அரசியலில் எதுவும் நடக்கலாம். அதிமுக கூட்டணி குறித்து இதுவே எனது பதில் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
 
•  கருணாநிதி தப்புக்கணக்கு-தட்ஸ்தமிழுக்கு ராமதாஸ் சிறப்புப் பேட்டி 
-ஷங்கர் காடுவெட்டி குருவை கைது செய்து இந்த மருத்துவருக்கே வைத்தியம் செய்யப் பார்க்கிறார் கருணாநிதி. அதெல்லாம் என்னிடம் நடக்காது. முன்னிலும் வேகமாக வீறு கொண்டு நடைபோடும் பாமக என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். குரு கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலை குறித்து தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: குரு கைது ஏன்?: குருவின் கைது எங்கள் கட்சிக்கு கலைஞர் விடுத்துள்ள நேரடி மிரட்டல். ...
 
•  தாய் கொலை-மகள் கற்பழித்துப் படுகொலை 
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தாயைக் கொன்ற மர்ம கும்பல், அவரது மகளை கற்பழித்துக் கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ளது பெத்தமநாயக்கனூர் பாளையம். இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இன்று அதிகாலையில் இவர் வெளியே சென்றிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல்முருகன் வீட்டுக்குள் புகுந்தது. அங்கிருந்த முருகனின் மனைவி மீனாவை அடித்து படுகொலை செய்தனர். பின்னர் மீனாவின் மகள் ...
 
•  2 அரவாணிகள் தீக்குளிப்பு: தொல்லை தந்த அரவாணி கைது 
சென்னை: பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் 2 அரவாணிகள் தீக்குளித்த சம்பவத்தில் இன்னொரு அரவாணியை போலீஸார் கைது செய்தனர்.
 
•  அருணாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம் 
டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சல் பிரதேச மாநிலத்தில், சீன எல்லையை ஒட்டியுள்ள ஜிஜாங் என்ற இடத்தில் இன்று அதிகாலை 3.05 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.1 ரிக்டராக இது பதிவாகியுள்ளது. இதனால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை என்று தெரிகிறது. நிலநடுக்கம் டெல்லியில் உள்ள பூகம்பவியல் ஆயவு மையத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
 
•  கருணாநிதியின் அதிகார துஷ்பிரயோகம்: ஆதாரம் அனுப்ப ஜெ. உத்தரவு 
சென்னை: முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள், ஊழல் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும், ஆதாரங்களையும் அதிமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அக்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
•  தெலுங்கானாவில் 'ஆந்திரா மீல்ஸுக்கு' தடை! 
ஹைதராபாத்: தெலுங்கானா பகுதியில் ஆந்திரா மீல்ஸ் சாப்பாட்டை வழங்கக் கூடாது என ஹோட்டல்களுக்கு தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
•  கற்பனையின் உச்சம் கண்ணதாசன்-சிவகுமார் 
காதல் பாடல்களில் கற்பனையின் உச்சத்துக்குச் சென்றவர் கவிஞர் கண்ணதாசன். தத்துவ, ஆன்மிக இலக்கியத்தில் புதிய இலக்கணம் படைத்தவர் என்று நடிகர் சிவக்குமார் புகழாரம் சூட்டினார்.
 
•  பல்கலை.யாகும் கல்லூரிகளால் யாருக்கு லாபம்?: விஜய்காந்த் 
சென்னை: 5 அரசு கல்லூரிகளையும் 2 தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதோடு, கட்டணங்களும் கண்டபடி உயர்த்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
•  2 கோடி வன்னியர்களின் தளபதியை கைது செய்வதா?-ராமதாஸ் 
சென்னை: இரண்டு கோடி வன்னியர்களின் தளபதி குருவை தலைவறைவாக இருந்தவர் என்று சொல்லிக் கைது செய்வதா... அரசியல் பழிவாங்கல் என்றால் என்ன என்பதை, குருவைக் கைது செய்ததன் மூலம் மீண்டும் ஒரு முறை முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி நிரூபித்திருக்கிறார் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்.
 
•  தனது அனுபவத்தை எனக்கு தந்த முதல்வர்- குரு 
காடுவெட்டி: அதிமுக ஆட்சியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை இப்போது எனக்குத் தந்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி என கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.
 
•  புத்தர் சிரித்தாலும் சிரித்தார்... 
-ஏ.கே.கான் (இது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை. சில பாகங்களாக வெளி வரும்) நாள்: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி காலை 7 மணி... இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி. எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் ...
 
•  அதிகாலையில் வீட்டை உடைத்து காடுவெட்டி குரு கைது-15 நாள் காவல்!! 
அரியலூர்: பாமக முக்கிய தலைவரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
•  20 பாமக தலைவர்களும் கைது: பெரம்பலூர், அரியலூரில் போலீஸ் குவிப்பு 
பெரம்பலூர்: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்ளில் கடும் பதட்டம் நிலவுகிறது.
 
•  தாயின் கள்ள காதலனுடன் தங்கைக்கு கல்யாணம்: அண்ணன் தற்கொலை! 
நாசரேத்: மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன். நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.
 
•  தூத்துக்குடியில் லாரி ஸ்டிரைக் நீடிப்பு!!! 
தூத்துக்குடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆன நிலையில் தூத்துக்குடி லாரி உரிமையாளர் மட்டும் போராட்டத்தினை இன்னமும் நீட்டிப்பு செய்துள்ளனர்.
 
•  பாளை சிறையில் கைதிகள் மோதல் 
நெல்லை: பாளை சிறையில் மதுரை-நாகர்கோவில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 100 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பாளை உள் சிறையில் 7-வது அறையில் நாகர்கோவில் விசாரணை கைதிகள் ஆறுமுகம், சுடலைமணி, கலீப் உள்பட 5 பேர் உள்ளனர். இதன் பக்கத்து அறையில் மதுரை விசாரணை கைதி வெங்கட் உள்ளார். இந்த நாகர்கோவில் கைதிகளுக்கும் இவருக்கும் இரவில் தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கட் தாக்கப்பட்டார். காலையில் சிறையின் அறைகளிலிருந்து கைதிகள் வெளியில் வந்தனர். ...
 
•  மணல் லாரிகளால் தொடரும் பலிகள் 
கடையம்: மணல் லாரிகளின் அதிரடிப் போக்குவரத்தால் கடையம் வட்டாரத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 9 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். கடையம் வட்டாரத்தில் கடையம், முதலியார்பட்டி, தி்ருமலையப்புரம், பொட்டல்புதூர் வழியாக, மணல் எடுக்க லாரிகள் மிக வேகமாக வருவது வாடிக்கையாகிவிட்டது. மணல் லோடுகளுடன் செல்லும் லாரிகளை விட மணல் எடுக்க வரும் லாரிகள்தான் மிக வேகமாக வருகிறது. மேலும் இப்பகுதி சாலைகளை சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடையம் பகுதி மக்கள் ...
 
•  புளியங்குடி அருகே திடீர் மறியல் 
புளியங்குடி: புளியங்குடி அருகே வேலைக்கு வரச்சொல்லிவிட்டு காணாமல் போன பஞ்சாயத்து அலவலர்களைக் கண்டித்து கூலித் தொழிலாழர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
•  ஜி-8 மாநாட்டில் 9ம் தேதி புஷ்ஷுடன் மன்மோகன் சந்திப்பு 
டெல்லி: ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் 9ம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார். பிரதமரின் ஜப்பான் பயணம் அணு சக்தி ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை பலப்படுத்தும் என வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ். மேனன் தெரிவித்துள்ளார்.
 
•  தின பலன் 
தின பலன் ஜூலை 05, 2008 மேஷம்- அமைதி ரிஷபம்- பொறுமை மிதுனம்- நஷ்டம் கடகம்- அனுகூலம் சிம்மம்- வெற்றி கன்னி- மேன்மை துலாம்- தெளிவு விருச்சிகம்- நலம் தனுசு- சாந்தம் மகரம்- நன்மை கும்பம்- வரவு மீனம்- ஜெயம் ...
 
•  இடதுசாரிகளின் 7ம் தேதி கெடுவை நிராகரித்தது காங்கிரஸ் 
டெல்லி: ஜூலை 7ம் தேதிக்குள் தனது நிலையை அரசு தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் விதித்த கெடுவை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது.
 
•  வீழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் சேது திட்டம் வெற்றி பெறும்: கருணாநிதி 
சென்னை: எத்தனை வீழச்சிகள் வந்தாலும், தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி சேது சமுத்திரத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
•  கொடநாடு வர முடியாது.. போயஸ்கார்டன் தான்.. 
சென்னை: ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக அவரை சந்திக்க வேண்டிய அதிகாரி கொட நாட்டில் சந்தித்துப் பேச மறுத்துவிட்டார். போயஸ் கார்டனில் சந்திக்க முடியும் எனக் கூறிவிட்டார்.
 
•  'பதுக்கம்மா' சிந்து துலானி! 
தமிழ் கைவிட்ட சிந்து துலானியை தெலுங்கு வாகாக பிடித்து வகையாக வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலிவுட் களத்தில் குதித்தனர் சிந்து துலானி. ஆனால் அவருக்கு தமிழில் சுத்தமாக அதிர்ஷ்டமே இல்லை. இத்தனைக்கும் தனுஷ், சிம்பு என இரு பெரும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டும் கூட தேற முடியாமல் போய் விட்டது. தமிழ்தான் இப்படிக் கைவிட்டு விட்டது. ஆனால் தெலுங்கு, சிந்துவுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தது. ...
 
•  மாட்டு வண்டிக்கு எதிராக ரவீனா! 
மாட்டு வண்டிகளுக்கு எதிரான பிரசாரத்தில் பாலிவுட் ஸ்டார்களான ரவீனா டாண்டன், இஷா கோபிகர், அக்ஷயி கண்ணா, ராகுல் கண்ணா, அர்ஜூன் ராம்பால் ஆகியோர் அணி திரண்டுள்ளனர்.
 
•  குரலைத் தேடி ஒரு வேட்டை! 
ஏர்டெல் சூப்பர் சிங்கர் -2006, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய போட்டிகளின் வெற்றியைத் தொடர்ந்து 2008ம் ஆண்டுக்கான சூப்பர் சிங்கர் போட்டிக்கு விஜய் டிவி தயாராகி விட்டது. இம்முறை சற்றே பெரிதாக திட்டமிட்டிருக்கிறது விஜய்.
 
•  புத்தர் சிரித்தாலும் சிரித்தார்.. (கடைசி பாகம்)! 
-ஏ.கே.கான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து. (இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை ...
 
•  சோயிப் அக்தர் மீதான தடையை சஸ்பெண்ட் செய்து கோர்ட் உத்தரவு 
கராச்சி: பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாலர் சோயிப் அக்தருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடையை லாகூர் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் விளையாடக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
•  செப்டம்பர் மாதம் முதல் மாநில மாநாடு: கார்த்திக் 
மதுரை: அகில இந்திய நாடாளும் கட்சியின் முதல் மாநில மாநாடு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 
•  பெண் குழந்தையைப் பிரசவித்த அமெரிக்க ஆண்! 
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவமனையில், பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த அதிசய பிறவியின் பெயர் தாமஸ் பீட்டி. இவருக்கு 34 வயதாகிறது. இயற்கையில் பெண்ணாக பிறந்தவர்தான் தாமஸ் பீட்டி. ஆனால் பின்னர் ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைச்சிகிச்சை மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறி விட்டார். ஆணாகவே தற்போது வாழ்ந்தும் வருகிறார். இவருக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை நடந்த போதிலும் ...
 
•  உதவிகள் 'குமுறல்'-இயக்குநர் 'திணறல்'! 
அந்தோணியார் படத்தின் இயக்குநர் பாண்டியனை அவரது உதவி இயக்குநர்கள் சிலர் அறைக்குள் வைத்துப் பூட்டி சரமாரியாக அடித்து உதைத்ததாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
•  திருவள்ளுவராக ரஜினி? 
புனித தோமையார் படத்தில் திருவள்ளுவப் பாத்திரத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை கேட்டுள்ளனர். ஏசுவின் சீடராக இருந்தவர் புனித தோமையார். இவர் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வேத சாட்சியாக உயிர்விட்டார். சென்னையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்தான் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே இரண்டு தேவாலயங்கள்தான் ஏசுவின் சீடர்கள் கல்லறை மேல் கட்டப்பட்டுள்ளது. முதலாவது வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம். அடுத்து சாந்தோம். புனித தோமையாரின் வாழ்க்கை ...
 
•  கடவுளும் நானும்-கருணாநிதி பேச்சு 
கடவுளை நான் எற்கிறேனா இல்லையா என்பதல்ல பிரச்சினை. கடவுள் என்னை ஏற்கும்படி நடந்து கொள்கிறாரா என்பதே இப்போதைய பிரச்சினை. எனவே கடவுள் ஏற்கும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னையில் நடந்த புனித தோமையார் திரைப்பட தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
 
•  மருத்துவ கவுன்சிலிங்: கோர்ட்டில் வாதாடி வென்ற மாணவி 
மதுரை: வயதை காரணம் காட்டி மறுக்கப்பட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்கும் உரிமையை நீதிமன்ற உதவியுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி வாதாடி, போராடி பெற்றுள்ளார்.
 
•  ''டூயட்டை தூக்கியெறியுங்கள்'' 
காதல் டூயட் போன்ற தேவையற்ற, எதார்த்தத்தை மீறிய காட்சிகளைத் தூக்கியெறிந்தால்தான் சினிமா உருப்படும் என்று டைரக்டர் மகேந்திரன் கூறினார். கமலஹாசன், பரதன், சிங்கீதம் சீனிவாசராவ், ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த அழகப்பன் முதல் முறையாக 'வண்ணத்துப் பூச்சி' என்ற குழந்தைகளுக்கான படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். ஒரு தாத்தாவையும், பேத்தியையும் சுற்றி பின்னப்பட்ட கதை. தாத்தாவாக பாலாசிங்கும், பேத்தியாக சிறுமி லட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். ரேவதி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ...
 
•  நமீதாவும் காஸ்ட்லிதான்! 
சூப்பர் ஸ்டாரின் படங்களில் தொடர்ந்து நடித்து சூப்பர் ஸ்டாரிணி ஆகி விட்டதால் நயன்தாராவின் சம்பளம் கிடுகிடுவென ஒன்றரை கோடியாகிவிட்டதை நேற்று பார்த்தோம்.
 
•  கொத்தடிமை-கர்நாடகத்தில்2 நெல்லை மாணவர்கள் மீட்பு 
சுரண்டை: கர்நாடகத்தில் கொத்தடிமைகளாகத் தவித்த நெல்லை மாணவர்கள் இருவர் கர்நாடகத்தில் மீட்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள பாலபத்திரராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் மாரிமுத்து, ராமலிங்கம் மகன் ராஜ்குமார். இருவரும் கடந்த ஏப்ரலில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். விடுமுறையில் ஊர் சுற்றியவர்களை பெற்றொர்கள் கண்டித்தனர். இதனால் மாணவர்கள் இருவரும் வீட்டில் கோபித்துக் கொண்டு கடந்த 26.4.08 அன்று ராஜ்குமார் அண்ணன் வேலை செய்யும் திருப்பூருக்கு பஸ் ஏறினர். ...
 




 Back to Top of Page 





Credit Cards Offers Compare and Apply!
Find Lowest Price Compare and Save!
Shopping
  
Daily Cartoon from CartoonStock.com
Daily funny cartoon from CartoonStock
© original artist c/o CartoonStock.com - unauthorised reproduction is illegal
Like this cartoon ?
License this cartoon for print use, web use or presentation use.
Buy this cartoon on a mug, mousemat or t-shirt.
Buy this cartoon as a print or original artwork.


 Back to Top of Page 



   
  
 
Resources
 Indian Festivals
 INDUSmall
 TajOnline

Popular Televisions
Lowest Prices
Samsung LN52A650 52" LCD TV$1999.99
Samsung LN-46A650 46" LCD TV$1635.00
Panasonic TH-50PZ800U 50" Plasma TV$2139.00
Sharp AQUOS LC52D64U 52" LCD TV$1419.00
Samsung LN52A550 52" LCD TV$1709.99

Popular Digital Cameras
Lowest Prices
Canon EOS 40D SLR Digital Camera Body Only$849.00
Canon EOS Rebel XSi Black Digital Camera Kit$770.00
Nikon D60 SLR Digital Camera Kit$593.01
Nikon D300 Black SLR Digital Camera Body Only$1519.99
Canon EOS 40D SLR Digital Camera Kit$1089.00

Popular Camcorders
Lowest Prices
Sony Handycam HDR-SR11 60GB Hard Drive Camcorder$849.00
Canon VIXIA HF10 16GB Camcorder$749.00
Canon VIXIA HF100 SDHC Flash Memory Camcorder$617.76
Sony Handycam HDR-SR12 120GB Camcorder$1049.00
Canon VIXIA HV30 Mini DV Camcorder$679.00

Popular Notebooks
Lowest Prices
Asus Eee PC 900 20G Notebook - White$529.99
Apple 15" MacBook Pro Notebook$1699.00
HP (Hewlett-Packard) 2133 Mini-Note Notebook$699.99
Apple 13.3" MacBook Notebook$1185.73
Apple 13.3" MacBook Air Notebook$1549.00